மோகனூரில் கொட்டி தீர்த்த கனமழை: மாவட்டம் முழுவதும் 383.30 மி.மீ., பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூரில் கொட்டி தீர்த்த கனமழை: மாவட்டம் முழுவதும் 383.30 மி.மீ., பதிவு

Added : நவ 08, 2021
Share
நாமக்கல்: தெற்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. அதையடுத்து, தமிழகத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கனமழையும், மற்ற இடங்களில் லேசாகவும் பெய்தது. மோகனூர், ராசிபுரம், கொல்லிமலையில், அதிக

நாமக்கல்: தெற்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. அதையடுத்து, தமிழகத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது.


நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கனமழையும், மற்ற இடங்களில் லேசாகவும் பெய்தது. மோகனூர், ராசிபுரம், கொல்லிமலையில், அதிக அளவில் மழை பெய்தது. மோகனூர் பகுதியில் நேற்று முன்தினம், இரவு, 8:00 மணிக்கு துவங்கிய மழை, ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. மீண்டும், இரவு, 10:30 மணியில் இருந்து விடிய விடிய கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மோகனூர் - ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் கீழ், மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மழை காரணமாக, ஏரி, குளம், குட்டை நிரம்புவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை, 7:00 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.,) பின்வருமாறு: எருமப்பட்டி, 50, குமாரபாளையம், 30.40, மங்களபுரம், 2.40, மோகனூர், 87, நாமக்கல், 10, ப.வேலூர், 20, புதுச்சத்திரம், 9, ராசிபுரம், 72, சேந்தமங்கலம், 45, திருச்செங்கோடு, 5, கலெக்டர் அலுவலகம், 9.50, கொல்லிமலை, 43 என, மொத்தம், 383.30 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X