பொது செய்தி

தமிழ்நாடு

சீக்குபாறை 'வியூ பாயின்ட்' பயன்பாட்டிற்கு அனுமதி

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் கொல்லிமலை. வாழவந்திநாடு பஞ்., செம்மேடு அடுத்த, நான்கு கி.மீ., தூரத்தில் சீக்குபாறை 'வியூ பாயின்ட்' அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கு சென்று மலையின் கீழ் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள காரவள்ளி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் கொல்லிமலை. வாழவந்திநாடு பஞ்., செம்மேடு அடுத்த, நான்கு கி.மீ., தூரத்தில் சீக்குபாறை 'வியூ பாயின்ட்' அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கு சென்று மலையின் கீழ் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள காரவள்ளி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட ஊர்களின் அழகான தோற்றத்தை கண்டு ரசித்து செல்வது வழக்கம். கடந்த, மூன்று மாதங்களாக வியூ பாயின்ட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்; அங்கு விரிவாக்கப்பணிகள் நடந்தன. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்து, கடந்த, 4ல் இருந்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது என, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரகர் சுப்பராயன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X