பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை முடிவு: பஸ் ஸ்டாண்டில் களை கட்டிய கூட்டம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில் கடந்த, 4ல், தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, தீபாவளிக்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கமாக விடுமுறை. அதனால், இந்தாண்டு தீபாவளிக்கு, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையாக அமைந்தது. பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் வெளிமாநிலத்தில் பணியாற்றும்

நாமக்கல்: தமிழகத்தில் கடந்த, 4ல், தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, தீபாவளிக்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கமாக விடுமுறை. அதனால், இந்தாண்டு தீபாவளிக்கு, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையாக அமைந்தது. பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் வெளிமாநிலத்தில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தொடர் விடுமுறை முடிந்ததையடுத்து, மீண்டும் பணிக்கு செல்ல நேற்று காலை முதல், நாமக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். அதனால், பஸ் ஸ்டாண்டில், மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தாலும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் பஸ்சுக்காக, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X