பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் ஆவணங்களை மீட்க கோரி எஸ்.பி., யிடம் மனு

Added : நவ 08, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: பெரியமணலி அருகே உள்ள மாரியம்மன் கோவில் ஆவணங்கள் மற்றும் மரகதலிங்கத்தை மீட்டுதரக் கோரி, கோவில் நிர்வாகி சுந்தர்குமார் தலைமையில், நேற்றுமுன்தினம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அருகே பழக்காரன்காடு பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவில்

எலச்சிபாளையம்: பெரியமணலி அருகே உள்ள மாரியம்மன் கோவில் ஆவணங்கள் மற்றும் மரகதலிங்கத்தை மீட்டுதரக் கோரி, கோவில் நிர்வாகி சுந்தர்குமார் தலைமையில், நேற்றுமுன்தினம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அருகே பழக்காரன்காடு பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவில் கட்டப்பட்டது. கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த அப்பாவு என்பவர் கடந்த, 2017ல் இறந்துவிட்டார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட நிர்வாகி சுந்தர்குமார் தலைமையில், எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபடுகின்றனர். கோவிலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் மரகதலிங்கத்தை திருடிசென்றுள்ளனர். எனவே, மாவட்ட எஸ்.பி., கோவில் ஆவணங்களைமீட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X