பொது செய்தி

தமிழ்நாடு

திருமணி முத்தாற்றில் வெள்ளம் பாதித்த பகுதியில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 08, 2021
Share
Advertisement
ப.வேலூர்: பரமத்தி டவுன் பஞ்.,ல், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். திருமணிமுத்தாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான, ஏற்காடு மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் உள்ள, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி திருமணிமுத்தாறு வெள்ளநீர்

ப.வேலூர்: பரமத்தி டவுன் பஞ்.,ல், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். திருமணிமுத்தாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான, ஏற்காடு மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் உள்ள, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி திருமணிமுத்தாறு வெள்ளநீர் பரமத்தி வந்தடைந்தது. இதனால் பரமத்தி அருகே, 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. கடந்த இரு தினங்களாக சேலத்தில் கனமழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இடும்பன் குளம் கரையோர பகுதியில் உள்ள பரமத்தி காந்திநகர், மரவபாளையம் குடியிருப்பு பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. அப்பகுதியில் வசிப்பவர்களை வருவாய்த் துறையினர் மீட்டு, பரமத்தி சமுதாய கூட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாலில் தங்க வைத்துள்ளனர். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பரமத்தி காந்திநகர், மரவபாளையம் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, 11 குடும்பங்களை சேர்ந்த, 35க்கும் மேற்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலங்களான பிள்ளைகளத்தூர் தரைப்பாலம், பில்லூர், மேல்சாத்தம்பூர் பாலங்களையும் ஆய்வு செய்தார். ப.வேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், மண்டல துணை தாசில்தார் சித்ரா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X