பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் - கரூர் புறவழிச்சாலையில் விரைவில் 3 புதிய மேம்பாலங்கள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சேலம் - கரூர் புறவழிச்சாலையில் மேலும் மூன்று புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்,'' என, எம்.பி., சின்ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, புறவழிச்சாலைகளில் அதிகமாக விபத்து ஏற்படக்கூடிய இடங்களில், பிளாக் ஸ்பாட் இடம் கண்டறிந்து புதிதாக மேம்பாலங்கள் அமைக்க

நாமக்கல்: ''நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சேலம் - கரூர் புறவழிச்சாலையில் மேலும் மூன்று புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்,'' என, எம்.பி., சின்ராஜ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, புறவழிச்சாலைகளில் அதிகமாக விபத்து ஏற்படக்கூடிய இடங்களில், பிளாக் ஸ்பாட் இடம் கண்டறிந்து புதிதாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சேலம் - கரூர் புறவழிச்சாலையில், அதிகமாக விபத்து ஏற்படக்கூடிய இடங்களான மல்லூர் சந்திப்பு, ஓவியம்பாளையம் சந்திப்பு (பரமத்தி பிரிவு), மரவபாளையம் சந்திப்பு (ப.வேலூர் பிரிவு) ஆகிய மூன்று இடங்களில், புதிதாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என, தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தேன். இதையடுத்து மூன்று இடங்களில், புதிதாக மேம்பாலங்கள் அமைப்பதற்கான திட்ட பணி, செலவு மதிப்பீடு தயார் செய்வதற்கு, அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X