பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி: மாயனூர் கதவணை, தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கரூர்: தொடர் மழை காரணமாக மாயனூர் கதவணை, ஆத்துப்பாளையம் அணை, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை, விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், மாயனூர் கதவணை, ஆத்துப்பாளையம் அணை மற்றும் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில்

கரூர்: தொடர் மழை காரணமாக மாயனூர் கதவணை, ஆத்துப்பாளையம் அணை, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.


கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை, விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், மாயனூர் கதவணை, ஆத்துப்பாளையம் அணை மற்றும் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 51, அரவக்குறிச்சி, 11, அணைப்பாளையம், 16, க.பரமத்தி, 20, குளித்தலை, 70, தோகைமலை, 70, கிருஷ்ணராயபுரம், 70, மாயனூர், 54, பஞ்சப்பட்டி, 72, கடவூர், 29.4, பாலவிடுதி, 57.4, மயிலம்பட்டி, 66 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 48.97 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மாயனூர் கதவணை நிலவரம்: மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 11 ஆயிரத்து, 458 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 12 ஆயிரத்து, 770 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. அணைப்பகுதியில், 54 மி.மீ., மழை பெய்துள்ளது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 2,307 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 2,262 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. ஆனால், அமராவதி ஆற்றில், 1,875 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.77 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 4,023 கன அடி தண்ணீர் வந்தது.


* க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 200 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 22.03 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X