பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவு பெறுகிறது சீசன்; முருங்கை காய் விலை உயர்வு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கரூர்: சீசன் நிறைவு பெறும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் காரணமாக முருங்கை காய் விலை அதிகரித்துள்ளது.அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், கரூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவில் மழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். ஆண்டுதோறும், ஜூலை

கரூர்: சீசன் நிறைவு பெறும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் காரணமாக முருங்கை காய் விலை அதிகரித்துள்ளது.


அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், கரூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவில் மழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். ஆண்டுதோறும், ஜூலை முதல் நவம்பர் வரை, முருங்கைகாய்க்கு சீசன் காலமாகும். இதனால், கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு முருங்கை காய் வரத்து, கடந்த ஒரு வாரமாக சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் காரணமாக, கடந்த மாதத்தை விட, தற்போது முருங்கை விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: அரவக்குறிச்சி வட்டாரத்தில், செடி முருங்கை, மரம் முருங்கை மற்றும் கொடி முருங்கை என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் நிறைவு பெறும் நிலையில், முருங்கைகாய் வரத்து குறைய துவங்கியுள்ளது. ஆனால், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, தற்காத்து கொள்ள முருங்கைகாய், கீரை மற்றும் பூ வகைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் செடி முருங்கை, கொடி முருங்கை இரண்டு அடி முதல், மூன்று அடி வரை வளரும். இந்த ரகங்கள் கடந்த மாதம், ஒரு கிலோ முருங்கைகாய் கொண்ட, ஒரு கட்டு, 75 ரூபாய் வரை விற்றது. தற்போது, 90 ரூபாய் வரை விற்கிறது. ஆனால், மரம் முருங்கை காய் ரகம், 70லிருந்து, 75 ரூபாயாக விற்கிறது. ஒரு காய் எட்டு முதல், 10 ரூபாய் வரை விற்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X