விவசாய நிலத்தில் மழைநீர் தேக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் மழைநீர் தேக்கம்

Added : நவ 08, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் புகுந்தது. விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம், பிள்ளபாளையம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மழை நீர் வடியும் இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் முழுவதும்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் புகுந்தது. விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம், பிள்ளபாளையம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மழை நீர் வடியும் இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் முழுவதும் விவசாய நிலங்களில் தேங்கியது. வாழை, வெற்றிலை, நெல் பயிர்கள் மூழ்கின. விவசாயிகள் கவலையடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை வி.ஏ.ஓ.,க்கள் பார்வையிட்டனர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக இரண்டு வீடுகளின் சுவர்கள் விழுந்தன. வீட்டில் இருந்தவர்கள் வேறு இடங்களில் தக்க வைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X