கட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் நீர் புகுந்து நாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் நீர் புகுந்து நாசம்

Added : நவ 08, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., புரசம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கட்டளை மேட்டு வாய்க்கால் கரை பலவீனம் அடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நான்கு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், பலவீனமடைந்த கரையின் ஒரு பகுதி உடைந்ததில் நீர், வயலில் புகுந்தது. இதில், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இருந்த

குளித்தலை: குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., புரசம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கட்டளை மேட்டு வாய்க்கால் கரை பலவீனம் அடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நான்கு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், பலவீனமடைந்த கரையின் ஒரு பகுதி உடைந்ததில் நீர், வயலில் புகுந்தது. இதில், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பலவீனமடைந்த கட்டளை மேட்டு வாய்க்கால் கரையை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X