சாலையோரம் கொட்டப்படும் கழிவால் ஓட்டுனர்கள் திணறல்| Dinamalar

சாலையோரம் கொட்டப்படும் கழிவால் ஓட்டுனர்கள் திணறல்

Added : நவ 08, 2021
Share
கரூர்: சாலையோரம் கொட்டப்படும் கட்டட கழிவுகளால், வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, கட்டடங்களை இடித்த மண் மற்றும் கற்கள் போன்ற பயனற்ற பொருட்களை முறையாக அகற்றுவது கிடையாது. அவற்றை, புன்னம் சத்திரம் ஓலப்பாளையம் பிரிவு அருகேயுள்ள, நெடுஞ்சாலை ஓரத்தில் இரவு நேரங்களில்

கரூர்: சாலையோரம் கொட்டப்படும் கட்டட கழிவுகளால், வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, கட்டடங்களை இடித்த மண் மற்றும் கற்கள் போன்ற பயனற்ற பொருட்களை முறையாக அகற்றுவது கிடையாது. அவற்றை, புன்னம் சத்திரம் ஓலப்பாளையம் பிரிவு அருகேயுள்ள, நெடுஞ்சாலை ஓரத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால், அவ்வழியாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பஸ், லாரி வரும் போது சாலையோரம் ஒதுங்க முடியாமல், கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் கற்களில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு கூட நடந்து விடுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால்தான், சாலை ஓரத்தில் தொடர்ந்து பயனற்ற பொருட்கள் கொட்டப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X