குடும்ப வன்முறை வழக்கு: அரசுக்கு கோர்ட் 'நோட்டீஸ்'

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பு ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாகி 16 ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவது குறையவில்லை. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களில் 86
 குடும்ப வன்முறை, வழக்கு,அரசு, கோர்ட், 'நோட்டீஸ்'

புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பு ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாகி 16 ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவது குறையவில்லை. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களில் 86 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு சட்ட உதவி உட்பட எந்த உதவியும் கிடைக்கவில்லை.


latest tamil news



அதனால் அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டும். கணவன் வீட்டில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்புடன் தங்குவதற்கு இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக டிச., 6க்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
09-நவ-202103:04:38 IST Report Abuse
Milirvan இந்த சட்டம் குறிக்கோளை எட்டவில்லை.. பாதிக்கப்படும் அப்பாவிப்பெண்கள் இதனை நாடுவதில்லை.. மாறாக துர்நோக்கத்துடன் செயல்படும் பெண்கள் அப்பாவி ஆண்களையும் அவர்களின் குடும்பத்தையும் பயமுறுத்த பழி வாங்க பயன் படுத்துகிறார்கள்.. போலீசும் இதனை பணம் பண்ணும் ஒரு வழியாக குஷியாக அமல் படுத்துகிறார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X