சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடலூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.கூடலூர்-மைசூர் சாலையில் தொரப்பள்ளி சோதனை அருகே, சாலையோரம் மூட்டைகளில், கட்டிய நிலையில் அரிசி இருப்பதாக, குடிமைப்பொருள் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு மேற்க்கொண்டனர். அதில் ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டு,
கூடலூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்-மைசூர் சாலையில் தொரப்பள்ளி சோதனை அருகே, சாலையோரம் மூட்டைகளில், கட்டிய நிலையில் அரிசி இருப்பதாக, குடிமைப்பொருள் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு மேற்க்கொண்டனர். அதில் ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டு, மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 1826 கிலோ அரிசியை, கூடலூர் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன், விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். முழு விசாரணைக்கு பின்னர், அரிசி கடத்தல் கும்பல் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடத்தல் வாகனம் குறித்தும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X