இந்திய அணி அசத்தல் வெற்றி: அஷ்வின், ஜடேஜா அபாரம்| Dinamalar

இந்திய அணி அசத்தல் வெற்றி: அஷ்வின், ஜடேஜா அபாரம்

Updated : நவ 09, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (5)
Share
துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரின் கடைசி லீக் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, நேற்றைய'சூப்பர் 12' சுற்றின் கடைசி லீக் போட்டியில் நமீபியாவை சந்தித்தது.'டாஸ்' வென்ற

துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரின் கடைசி லீக் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.



latest tamil news



எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, நேற்றைய'சூப்பர் 12' சுற்றின் கடைசி லீக் போட்டியில் நமீபியாவை சந்தித்தது.'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு, ராகுல் சகார் சேர்க்கப்பட்டார்.


ஜடேஜா அபாரம்


நமீபிய அணிக்கு மைக்கேல் வான், ஸ்டீபன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் மைக்கேல் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார். அடுத்து வந்த ஷமியின் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஸ்டீபன். 4 ஓவரில் நமீபியா 31/0 ரன் குவித்தது.இந்நிலையில் பும்ரா வேகத்தில் மைக்கேல் (14) அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா, தனது 3வது பந்தில் வில்லியம்சை 'டக்' அவுட்டாக்கினார். தொடர்ந்து ஸ்டீபனையும் (21) வெளியேற்றினார்.


அஷ்வின் 'மூன்று'


மறுபக்கம் தன் பங்கிற்கு சுழலில் மிரட்டிய அஷ்வின், நிகோல் (5), எராஸ்மசை (12) வெளியேற்றினார். மீண்டும் அசத்திய அஷ்வின், இம்முறை கிரீனை 'டக்' அவுட்டாக்கினார்.
டேவிட் வைஸ் (26), பும்ரா 'வேகத்தில்' சரிந்தார். நமீபிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.


latest tamil news





சூப்பர் துவக்கம்


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ராகுல் ஜோடி சூப்பர்துவக்கம் கொடுத்தது.ரன்மழை பொழிந்த ரோகித் 31 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 56 ரன்னுக்கு அவுட்டாக, ராகுல் அரைசதம் அடித்து அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று தந்தார்.இந்திய அணி 15.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ராகுல் (54), சூர்யகுமார் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.


3000


நேற்று 18 ரன் எடுத்த போது சர்வதேச 'டி-20' 3000 ரன் எடுத்த மூன்றாவது வீரர் ஆனார் ரோகித் சர்மா. இவர் 116 போட்டிகளில் 3038 ரன் எடுத்துள்ளார். முதல் இரு இடத்தில் இந்தியாவின் கோஹ்லி (3227), நியூசிலாந்தின் கப்டில் (3115) உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X