சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதி

Updated : நவ 10, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை,: தியேட்டர்களில் அனைத்து இருக்கையையும் பயன்படுத்த அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் அனைத்து இருக்கையையும் பயன்படுத்த அனுமதி வழங்கி, அக்டோபரில் அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து
சினிமா தியேட்டர்கள்,100 சதவீதம்,  இருக்கை, அனுமதி

சென்னை,: தியேட்டர்களில் அனைத்து இருக்கையையும் பயன்படுத்த அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் அனைத்து இருக்கையையும் பயன்படுத்த அனுமதி வழங்கி, அக்டோபரில் அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இருக்கைகளை முழுமையாக பயன்படுத்த அனுமதித்தால், இடைவெளி பின்பற்ற முடியாது' என்றார்.

இதையடுத்து, 'நிபுணர்களின் ஆலோசனை பெற்று அரசு முடிவெடுத்துள்ளது. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யாமல், நிர்வாக உத்தரவில் குறுக்கிட முடியாது. முக கவசம், உரிய இடைவெளி பின்பற்றும்படி, ஏற்கனவே வழிமுறைகள் உள்ளன. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.'குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கொரோனா தாக்கம் எண்ணிக்கையை பொறுத்து, சூழ்நிலையை அரசும் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-202123:02:24 IST Report Abuse
 rajan மழை வந்ததால் அண்ணாத்த படம் போணியாகவில்லை ஐயோ பாவம் சன் பிக்சர்ஸ்.
Rate this:
Cancel
sugumar s - CHENNAI,இந்தியா
09-நவ-202115:25:31 IST Report Abuse
sugumar s Social Distancing is not possible with 100% admission in cinema theatres. This has to be reversed.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
09-நவ-202110:13:49 IST Report Abuse
sankar அதுசரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X