முல்லைப் பெரியாறு திறப்பு ஏன்? :அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : 'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருந்த நீரை திறந்து விட்டோம்' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, ஏன் தண்ணீர் திறந்து விட்டீர்கள்; கேரள அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்
முல்லைப் பெரியாறு திறப்பு ஏன்?  :அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

சென்னை : 'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருந்த நீரை திறந்து விட்டோம்' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:

'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, ஏன் தண்ணீர் திறந்து விட்டீர்கள்; கேரள அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை திறப்பதற்கான நடைமுறை விதிகளின்படி, திறப்பதற்கு முன், கேரள அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். எனவே, நீர் கொள்ளளவு அதிகமானதால், அக்., 27ல் கேரள அரசுக்கு, 29ம் தேதி உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஅதன்படி, 29ம் தேதி காலை 7:29 மணிக்கு, தமிழக நீர்வள அலுவலர்களால், அணை மதகுகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்தில், கேரள நீர்வளத் துறை அமைச்சரும், அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டனர்.அணையின் உபரி நீர் போக்கியை திறக்கலாம் என்பது, தமிழக அலுவலர்கள் எடுத்த முடிவு. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த, நீர்மட்ட அளவுகளை அடிப்படையாக வைத்து, வல்லுனர் குழு வெளியிடும் அறிவிப்புகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்க வேண்டும்.
எனினும், வல்லுனர் குழு தன் முடிவுகளை, சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாற்றலாம். மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த, நீர்மட்ட அளவுகளின்படி, அணையின் நீர் மட்டம், அக்டோபர் 10 அன்று 138.50 அடியாகவும், 20ம் தேதி 137.75 அடியாகவும், 31ம் தேதி 138 அடியாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், 28ம் தேதி காலை 138.75 அடியாக நீர்மட்டம் இருந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் எடுத்த போதும், நீர்மட்டம் அதிகரித்தது. எனவே, உபரி நீர் போக்கிகள் வழியே தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருந்த நீர் திறக்கப்பட்டது. இம்மாதம், 30ம் தேதி அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
09-நவ-202110:46:28 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஏதோ பதில் சொல்கிறார், நாமும் நம்புவது போல் நடிப்போம். எம்ஜிஆர் அவர்கள் இவர் படிப்புக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார் என்று ஊடவியல் வாயிலாக அறிந்தோம். ஏன் எம்ஜிஆர் அவர்கள் இவருக்கு உதவி செய்தார்?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-நவ-202110:19:56 IST Report Abuse
duruvasar ஜால்ரா அடிக்கவும், செய்திகளை வசதிக்கேற்ப்ப மாற்றி பரப்பவும் ஊடகங்கள் பக்க பலமாக இருப்பதால் துரை இதைவிட பன்மடங்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார் என எதிர்பார்க்கலாம். மதகின் இடுக்கில் மாட்டிக்கொண்ட முதலையின் உயிரை காப்பாற்றவே மதகை திறந்துவிட்டதாகவும் கூறலாம்..
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
09-நவ-202109:55:51 IST Report Abuse
Arul Narayanan உச்ச நீதிமன்றம் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று ஆணையிடவே இல்லை. வல்லுநர் குழு பரிந்துரையை ஏற்கலாம் என்று கருத்து மட்டுமே தெரிவித்தது. ஏற்க முடியாது என்று சொல்ல வழக்கறிஞரை யார் தடுத்தார்? உச்ச நீதிமன்ற ஆணைகளையே கேரளா மதிப்பதில்லை. திமுக அரசு மட்டும் வெறும் பரிந்துரையையே ஏற்று கீழப்படிவதின் மர்மம் ஏனோ? அலட்சியமா அல்லது ஆதாயமா?
Rate this:
raja - Cotonou,பெனின்
09-நவ-202113:31:43 IST Report Abuse
rajaவிஜயனின் அடிமைகளுக்கு உரிமையை பற்றி பேச உரிமை எது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X