சென்னை 'உஷ்ஷ்ஷ்!': 'நீட்' எதிர்ப்பு பணால்!

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (84) | |
Advertisement
'நீட்' எதிர்ப்பு பணால்!கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வு முடிவுகளில், தேனியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அகில இந்திய அளவில் முன்னிலை இடம் பெற்றார்.பல அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர். இந்த விபரங்களை, தமிழக பள்ளி கல்வி துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள், நவம்பர் 1ல் வெளியாகின. அகில இந்திய அளவில் முன்னிலை



'நீட்' எதிர்ப்பு பணால்!



கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வு முடிவுகளில், தேனியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அகில இந்திய அளவில் முன்னிலை இடம் பெற்றார்.



latest tamil news




பல அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர். இந்த விபரங்களை, தமிழக பள்ளி கல்வி துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள், நவம்பர் 1ல் வெளியாகின. அகில இந்திய அளவில் முன்னிலை பெற்றவர்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றனர்.

சில அரசு பள்ளிகளும், நீட் ஒருங்கிணைப்பாளர்களும், அரசின் இலவச நீட் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர் விபரங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒரு வாரமாகியும், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து முறையாக பட்டியல் வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்ற பட்டியல் வெளியிட்டால், நீட் தேர்வு மீது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடும். தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளின், அரசியல் ரீதியான நீட் எதிர்ப்பு பிரசாரம் நீர்த்து போய் விடும் என்பதால், நீட் தேர்ச்சி பட்டியலை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


சிவனிடம் கோரிக்கை



கேரளாவிற்கு தனிப்பட்ட பயணமாக, விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வந்ததால், அவர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கினார். அவரை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார்.


latest tamil news




இருவரும் டீ குடித்தபடி, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசியுள்ளனர். அப்போது, அமைச்சர், 'இஸ்ரோ வாயிலாக, தென் தமிழகத்தில் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றும், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம், ராக்கெட் உதிரிபாக தொழிற்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், முதல்வர் சார்பில் கோரிக்கை வைப்பதாக கூறியிருக்கிறார்.

அதையெல்லாம் கேட்ட இஸ்ரோ தலைவர் சிவன், 'எல்லாம் நல்லபடி நடக்கும்' என சிரித்தபடி சொன்னாராம். 'சிவன் மனது வைத்தால், தென் மாவட்டங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்; தி.மு.க., ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்' என, ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர்.


முதல்வர் 'அப்செட்'



முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும், பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, தமிழக அரசு, கேரள அரசிடம் அனுமதி கோரியது.


latest tamil news




கேரள வனத் துறை அனுமதி அளிக்காமல் இருந்தது. சில தினங்களுக்கு முன், மரங்களை வெட்ட அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் மறுநாளே, கேரள அரசு அந்த அனுமதியை ரத்து செய்தது.

இதை அறிந்த முதல்வர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தான் கேரளாவில் நடக்கிறது. எனவே, கடுமையாக விமர்சிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் பெரிதாக்க திட்டமிட்டுள்ளதால், முதல்வர் தரப்பில் அதிருப்தி என தகவல்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
10-நவ-202102:06:16 IST Report Abuse
Priyan Vadanad இன்னும் கொஞ்ச நாள் இந்த படம் ஓடும் இல்ல இல்ல ஓட்டப்படும்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
09-நவ-202123:58:01 IST Report Abuse
Aarkay எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீட் தேர்வு இல்லையென்றால் மட்டும் இறந்த மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படிக்க இடம் கிடைத்திருக்குமா? தற்கொலை தன்னம்பிக்கையின்மை, கோழைத்தனத்தையே காட்டுகின்றது. தன்மீது நம்பிக்கை வைத்துள்ள எவரும் தற்கொலை முடிவுக்கு வரமாட்டார்கள். மாணவர்கள் மேல் அக்கறையிருந்தால், அரசு நீட் தேவுக்கான தரமான பயிற்சியை கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் இலவசமாய் பெற வழிவகை செய்யவேண்டுமேயன்றி, தேர்வே வேண்டாமென்பது கேலிக்கூத்து.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
09-நவ-202122:33:58 IST Report Abuse
venkates ஏழை மாணவர்களுக்கு பயனடைவதை ஆதரவாளர்கள் விளம்பரம் செய்தால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X