சென்னையில் 2015ல் பெய்தது போல, சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 5,000 நிவாரண தொகை செலுத்தப்பட்டது. தற்போது ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, கள நிலவரங்களை தெரிந்து உள்ளார். அவரிடம், நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை முழுதும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் தான் உள்ளனர். ஒவ்வொரு பகுதி வாரியாக, பாதிக்கப்பட்டவர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால், இன்னும் அந்த பணி முடிவடையவில்லை. ஒட்டுமொத்த விபரங்கள் சேகரித்த பின், நிவாரண தொகை குறித்து இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE