'புதிய விவசாய சட்டத்தை எதிர்ப்பது கோபாலபுரம் குடும்பம் மட்டுமே'; *பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை காட்டம்

Added : நவ 09, 2021 | |
Advertisement
அவனியாபுரம், : 'புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பது தி.மு.க., வின் கோபாலபுரம் குடும்பம் மட்டுமே' என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எந்த விவசாயியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. விவசாய சட்டத்தை எதிர்க்க கூடிய ஒரே குடும்பம் தி.மு.க., வின் கோபாலபுரம்


அவனியாபுரம், : 'புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பது தி.மு.க., வின் கோபாலபுரம் குடும்பம் மட்டுமே' என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எந்த விவசாயியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. விவசாய சட்டத்தை எதிர்க்க கூடிய ஒரே குடும்பம் தி.மு.க., வின் கோபாலபுரம் குடும்பம். அவர்கள் 4 பேர் சேர்ந்து எதிர்ப்பதால், விவசாய சட்டம் தவறாக இருக்காது.புதிய விவசாய சட்டத்தில் பிரதமர் மோடி என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளாரோ அது ஏற்கனவே தமிழகத்தில் 2016 லேயே மாதிரி ஒப்பந்த முறை என்கின்ற சட்டம் மூலமாக உள்ளது.

பல மாநிலங்களில் புதிய விவசாய சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். தி.மு.க., எதிர்த்தாலும் விவசாய சட்டம் தமிழகத்தில் வரும். அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.பிரதமர் மோடி திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளன. மிகப்பெரிய வெற்றியாக வரப்போகிறது.முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போதும் மழைநீரால் சென்னை தத்தளித்தது. தற்போது முதல்வராக இருக்கும் போதும் அதே நிலைதான் நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் சென்னையில் நீர் நிரம்பி வருகிறது. அதை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X