மழை நீரால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமம்

Added : நவ 09, 2021 | |
Advertisement
காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்குவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக, காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையின் நடுவே குளம் போல

காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்குவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக, காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையின் நடுவே குளம் போல தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.காவலான் கேட், டெம்பிள்சிட்டி போன்ற பகுதிகளில் மழை நீர் வடிந்து, வேகவதி ஆற்றில் கலப்பதால், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் செல்கிறது.அதே சமயம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள குமார் தெரு, கண்ணப்பன் தெரு போன்ற இடங்களில் சாலையிலேயே தண்ணீர் தேங்குவதால், பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக உள்ளது.மாநகராட்சிக்கு புகார் தெரிவித்த உடன், மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழை நீரை அகற்றுகின்றனர். ஆனால், தொடர் மழை காரணமாக, மழை நீர் வடிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X