விண்வெளியில் நடந்து சீன வீராங்கனை சாதனை

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
பீஜிங் : சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், முதன் முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்து உள்ளார்.விண்வெளியில் 'டியன்ஹி' என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அக்., 16ல் இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட மூன்று பேர் 'ஷென்ஷோ - 13' விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 'இவர்கள் மூவரும் டியன்ஹி ஆய்வு நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி கட்டுமான பணிகளை
China, space station, first spacewalks, Shenzhou13 crew

பீஜிங் : சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், முதன் முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்து உள்ளார்.

விண்வெளியில் 'டியன்ஹி' என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அக்., 16ல் இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட மூன்று பேர் 'ஷென்ஷோ - 13' விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 'இவர்கள் மூவரும் டியன்ஹி ஆய்வு நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்வர்' என, சீனா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று டியன்ஹி ஆய்வு நிலையத்தில் இருந்து, வங் யபிங், ஜாய் ஆகியோர் வெளியேறி விண்ணில் நடந்து, வெளிப்புற கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு, டியன்ஹியில் இருந்த மூன்றாவது விண்வெளி வீரரான யி குவாங்பூ உதவி செய்தார். ஆறு மணி நேரம் விண்வெளியில் நடந்து பல்வேறு பணிகளை செய்து முடித்த பின், வங் யபிங், ஜாய் ஆகியோர் டியன்ஹிக்கு திரும்பினர்.


latest tamil news


இதன் வாயிலாக, விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை, வங் யபிங் பெற்றுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான வங் யபிங், விமானப் படையில் பணியாற்றி, விண்வெளி துறைக்கு வந்தவர். ரஷ்யாவின் வாலன்டினா தெரஷ்கோவாவிற்கு பின், விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும், வங் யபிங்கிற்கு கிடைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
09-நவ-202122:50:54 IST Report Abuse
jagan தீய முக பயம் இல்லாமல் நடைப்பயிற்சி செய்ய ஒரு இடம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09-நவ-202120:41:15 IST Report Abuse
Ramesh Sargam அய்யய்யோ அப்ப விண்வெளியில் கூட இவங்க கொரானா வைரஸை பரப்பிடுவாங்க... போச்சுடா...
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
09-நவ-202119:51:53 IST Report Abuse
அன்பு இந்திய பெண் ஒருவர் விண்வெளியில் விரைவில் நடப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X