சென்னை வானிலை ரேடார் விரைவில் சீர் செய்யப்படும்: மத்திய அரசு உறுதி| Dinamalar

சென்னை வானிலை ரேடார் விரைவில் சீர் செய்யப்படும்: மத்திய அரசு உறுதி

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (8) | |
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் 'ரேடார்' பழுதடைந்துள்ள நிலையில், அதை சீர் செய்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு உறுதியளித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை காலங்களில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்து வருகிறது. இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக புயல்களின் தன்மை, மழைப் பொழிவு குறித்த எதிர்பார்ப்பு
doppler weather radar, Chennai,Weather,சென்னை,வானிலை

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் 'ரேடார்' பழுதடைந்துள்ள நிலையில், அதை சீர் செய்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலங்களில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்து வருகிறது. இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக புயல்களின் தன்மை, மழைப் பொழிவு குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றை கணிப்பது கடினமாகி வருகிறது.

சென்னை துறைமுகம் அருகே உள்ள 'டாப்ளர் வெதர் ரேடார் 15' என்ற கருவி தான் 15 ஆண்டுகளாக, மழை குறித்த முன் தகவல்களை தந்து கொண்டிருந்தது. இந்த கருவி ஏற்கனவே பலமுறை பழுதாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழுதாகி உள்ள தகவல் சமீபத்தில் தெரிய வந்தது. இந்த பிரச்னையை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கவனத்திற்கு, மதுரை லோக்சபா தொகுதி எம்.பி.,யும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் கொண்டு சென்றார்.


latest tamil news



இந்நிலையில், வெங்கடேசனிடம் மத்திய புவி அறிவியல் துறையின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:சென்னை துறைமுகத் தில் உள்ள ரேடாரை பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனவே விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்.மேலும், தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் முக்கியமான ரேடார் வேலை செய்ய முடியாமல் போனது குறித்து, உரிய முறையில் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஏற்பாடாக ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை குறித்த முன்னறிவுப்புகள் எந்தவித தாமதமும், இடையூறும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X