டுவிட்டர் வாயிலாக அச்சுறுத்தும் சீனா; எல்லையில் இந்திய வீரர்கள் உஷார்

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளை குவிக்கும் புகைப்படங்கள் மற்றும், 'வீடியோ'க்களை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அதிக அளவில் வெளியிட்டு நம் ராணுவத்தினரை அச்சுறுத்தும் நடவடிக்கையில் சீன அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளை
china, India, LoC, Twitter

புதுடில்லி : அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளை குவிக்கும் புகைப்படங்கள் மற்றும், 'வீடியோ'க்களை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அதிக அளவில் வெளியிட்டு நம் ராணுவத்தினரை அச்சுறுத்தும் நடவடிக்கையில் சீன அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி உள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சமீபத்தில் எச்சரித்தது. இதையடுத்து எல்லையில் நம் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


latest tamil news



இந்நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சீன ராணுவம் பெயரில் உள்ள, 'டுவிட்டர்' சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன.

சீனாவில், 'டுவிட்டர்' பயன்பாட்டில் இல்லாதபோதும், அந்நாட்டு ராணுவத்தின் பெயரில் இவை பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை நம் ராணுவ புலனாய்வு துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அருணாச்சல பிரதேசம், லடாக் எல்லையில் நம் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-நவ-202115:57:21 IST Report Abuse
ஜெயந்தன் எல்லையிலும் சுட்டது வடை தானா
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
09-நவ-202115:46:21 IST Report Abuse
Barakat Ali "இந்த சம்பவத்தை அடுத்து அருணாச்சல பிரதேசம், லடாக் எல்லையில் நம் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்." இதுதான் உறுத்துது இதைப்பார்த்துதானா நாம் உஷார் ஆகவேண்டும் ? அல்லது இதைப்பார்த்தபின்தான் நாம் எச்சரிக்கை அடைகிறோம் என்று தகவல் பரப்பப் படுகிறதா ?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
09-நவ-202115:44:18 IST Report Abuse
Barakat Ali தானாகவே ஆக்கிரமிப்புக்கு முயற்சி செய்தார்கள் தடுக்க முனைந்த நம்முடன் துணிந்து போர் செய்யவும் அவர்களுக்குத் துணிவில்லை சொந்த மக்களே சிரிப்பார்களே என்று உறுத்தலாக இருப்பதால் நம்மை அச்சுறுத்தி அவர்களை மகிழ்விக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X