பொது செய்தி

இந்தியா

கோவேக்சினுக்கு பிரிட்டன் ஒப்புதல்: நவ.,22 முதல் அமல்

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி, வரும் நவ.,22 முதல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இங்கிலாந்து சென்றால் தனிமைபடுத்தி கொள்ள வேண்டியதில்லை.இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த
UK , Bharat Biotech, Covaxin, approve, Covid, vaccines,

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி, வரும் நவ.,22 முதல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இங்கிலாந்து சென்றால் தனிமைபடுத்தி கொள்ள வேண்டியதில்லை.

இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.சில நாட்களுக்கு முன்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.


latest tamil news


இந்நிலையில், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எலிஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு சிறந்த செய்தி. வரும் 22ம் தேதி முதல் கோவேக்சின் உள்ளிட்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டியது இல்லை. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் நவ.,22ம் தேதி காலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது. கோவேக்சின் தவிர்த்து, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் பெற்ற சீனாவின் சினோவாக் மற்றும் சைனோபார்ம் தடுப்பூசிகளுக்கும் பிரிட்டன் ஒப்புதல் கிடைக்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
09-நவ-202116:56:47 IST Report Abuse
J. G. Muthuraj அரே ....வ்வ்வா....வ்வ்வா....I do not know what was all the fuss about not accepting Covaxin so far.....
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-202112:19:50 IST Report Abuse
Srprd is it true that Covaxin is less effective than Covishield ?
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
10-நவ-202100:08:32 IST Report Abuse
SureshKumar Dakshinamurthyஇல்லை....
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
09-நவ-202110:41:21 IST Report Abuse
Veeramani Shankar Great. Our Medicine is approved by WHO and all so-called developed nations. Congratulations to our scientists and Administration and very well diplomacy by Modi and team. Due to this we can export our medicine to other nations also
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X