தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன: வெள்ள அபாய எச்சரிக்கை

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் முக்கிய அணைகளாக சோலையாறு அணை, ஆழியாறு அணை, மேட்டூர் அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, கிருஷ்ணகிரி அணை,
TN,Tamilnadu, DAM, FULL, தமிழகம், முக்கிய அணைகள், நிரம்பி வழிகின்றன, வெள்ள அபாய எச்சரிக்கை,

சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழகத்தில் முக்கிய அணைகளாக சோலையாறு அணை, ஆழியாறு அணை, மேட்டூர் அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, கிருஷ்ணகிரி அணை, திருமூர்த்தி அணை, மோர்தானா அணை, சாத்தனுார் அணை, கெலவரப்பள்ளி அணை விளங்குகிறது.

இதுபோக பவானி சாகர் அணை, கடனாநிதி அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை, அமராவதி அணை, கொடுமுடி அணை, சேர்வளாறு அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன.


latest tamil news


தற்போதைய நிலவரப்படி, வடகிழக்கு பருவ மழை காரணமாக மேட்டூர் அணை 109 அடி, பாபநாசம் அணை 143 அடி, சேர்வளாறு 156 அடி, மணிமுத்தாறு 118 அடி, பவானிசாகர் 103 அடி, வைகை 68 அடி, அமராவதி 87 அடி, கொடுமுடி அணை 52 அடி, திருமூர்த்தி அணை 54 அடி, சோத்துப்பாறை 126 அடி, கடனா நதி அணை 85 அடியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள அணைகள் பெரும்பாலும் கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ளதால் அணையின் கரையோர பகுதி மக்கள் வெளியேறும்படி உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுப்பணித்துறை சார்பில் தண்டோரோ போட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட குளம், கண்மாய் போன்ற அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
09-நவ-202111:49:52 IST Report Abuse
Raj உபரியாக வரும் நீரை, கன்வாய்களுக்கும், ஏரிகளுக்கும், திருப்பி விட்டு முறையாக சேமித்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இன்றி தமிழகத்தை காப்பற்ற முடியும்
Rate this:
raja - Cotonou,பெனின்
09-நவ-202117:48:12 IST Report Abuse
rajaவிடியல் வந்துட்டாருல்ல நமக்கு எதுக்கு கவலை....புறங்கையை நக்கியாவது வயித்துக்குள்ள சேமிச்சிரமாட்டாரு.......
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-நவ-202111:25:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாட்டுக்கு தண்ணியாலே கண்டம். பல விதங்களில். பஞ்சம், குடி, வெள்ளம்ன்னு.. அதிலே இது ஒண்ணு.
Rate this:
raja - Cotonou,பெனின்
09-நவ-202117:45:48 IST Report Abuse
rajaஅடுத்ததா மார்ச்சு மாசத்துல இருந்து வெயில் ல கண்டமுன்னு சொல்லுவியா.... எப்போ கேசியம் எல்லாம் சொல்ல ஆரமிச்ச...பகுத்தறிவுவாதி இப்படி சொல்ல மாட்டானே.......
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-நவ-202111:21:25 IST Report Abuse
சீனி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. வாழ்க விவசாயம் வளர்க தமிழகம்
Rate this:
raja - Cotonou,பெனின்
09-நவ-202117:47:02 IST Report Abuse
rajaஅதெப்படி கடலுக்கு போன, போகப்போற தண்ணிய வச்சி விவசாயம் செய்யமுடியுமுன்னு இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X