2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?; ஐகோர்ட் கேள்வி

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (94) | |
Advertisement
சென்னை: ‛‛கடந்த 2015 ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. 2015க்குப் பிறகு கடும் மழை
chennairains, highcourt, chennai, rain, flood, சென்னை, வெள்ளம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்

சென்னை: ‛‛கடந்த 2015 ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. 2015க்குப் பிறகு கடும் மழை வெள்ளத்தை சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு விசாரித்து. மழை பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி 2015ம் ஆண்டில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார். பருவமழை மீண்டும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளது என்றார். ஒரு வாரத்துக்குள் நிலைமை சீராக வேண்டும். இல்லை என்றால் தன்னிச்சையாக கோர்ட் முன்வந்து வழக்கு தொடரும் என எச்சரித்தார்.

latest tamil newsகடந்த 2015ல் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிட்டதன் விளைவாக சென்னையில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதுவரை சென்னை சந்தித்திராத அவலத்தை அந்த வெள்ளம் கொண்டுவந்து சேர்த்தது. இதனால் அரசும், நிர்வாகமும் பாடம் கற்றுக்கொண்ட நிலையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மராமத்துப் பணிகளை பெருநகர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

ஆனால், அதன்பிறகு 7 ஆண்டுகள் ஆனநிலையில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னைப் பெருநகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அரியலுார் மாவட்டம் பெரிய திருக்கோணத்தில் மாமனக்கா ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தெரிவித்ததாவது:

கடந்த 2015ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? மீண்டும் சென்னையை தத்தளிக்க விட்டுவிட்டார்களே. மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்துகொண்டிருந்தார்கள்.

மக்கள் பாதிநாள் தண்ணீரிலும், பாதிநாள் தண்ணீருக்காவும் தவிக்கின்றனர். சென்னை உட்பட அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு பாடத்தை கற்பித்துள்ளது.

ஒரு வாரத்தில் நிலைமை சீராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை தொடுக்கும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
10-நவ-202100:41:49 IST Report Abuse
மிளிர்வன் ஹை.. ஹைகோர்ட்டு நல்லாத்தான் கேக்குறாய்ங்க டீட்டைலு.. 2026 ல இந்த கெய்வி கேக்குமா ஹைகோர்ட்டு? இல்ல கூவம் க்ளீனிங், ஆறு ஏரி என்க்ரோச்சு பத்தி கேய்வி கேக்குமா? அல்லாம் பாலிடிக்ஸ்ஸு...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
10-நவ-202100:12:43 IST Report Abuse
Aarkay சீமான் அண்ணாத்த ஏற்கெனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். டாஸ்மாக் குன்றியத்தில், ஒழுங்காக வரி கட்டி, விதிகளை பின்பற்றி, தலைவிதியை நொந்தபடி உண்மையாய் வாழ்பவன் இங்கிருக்க தகுதியற்றவன்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-நவ-202113:43:58 IST Report Abuse
Visu Iyerபாண்டிச்சேரி இந்தியாவில் தானே இருக்கு.....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-நவ-202122:09:08 IST Report Abuse
sankaranarayanan தயவுசெய்து தலைமை நீதிபதி அவர்கள் சகாக்கள் உடனே கே.கே.நகர் - எம் ஜி ஆர் நகர் சென்று, அருகில் உள்ள அண்ணா சாலையில் தொண்டப்பட்ட பள்ளம், ஐந்து - ஆறு வருஷமாக அப்படியே உள்ளதை, கண்டு அந்த குழியை மழை வரும்முன்னே மூடாத சம்பத்தப்பட்ட நபர்களை - அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும். அந்த இலாக்காவையே மூடிவிட வேண்டும் இதுவரையில் அதை கவனிப்பார் யாருமே இல்லை. வெறும் சில குச்சிகளை நட்டுவிட்டு மக்களை எச்சரிக்கையாக அந்த பக்கம் போகும்போது கவனமாக செல்ல மக்களே செய்துள்ளனர். மாநில அரசாங்கமோ அல்லது உருப்படவேட்டி சென்னை கார்பொரேஷனோ அதை கண்டுகொள்வதே இல்லை. இதில் எத்தனை மக்கள் மடியப்போகிறார்களோ தெரியஸ்வில்லை. எப்போதுதான் விடிமோட்சம் கிடைக்குமோ தெரியவில்லை . பாவம் மக்கள் பரிதாபம் ஆட்சி அண்ணாசாலையே முழுவதும் மூடிவிட்டால், பெருமிதம் ஆட்சியின் பெருமை நீதி அரசர்கள்தான் அதற்க்கு விமோச்சனம் கொண்டு வரவேண்டும் விரைவில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X