சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கன முதல் அதி கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
தென்கிழக்கு வங்கக்கடல், வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக்கூடும்.

இன்று (நவ.,9ம்தேதி):
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கடலுார், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 10ம் தேதி:
டெல்டா மாவட்டங்கள், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலுார், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் கனமுதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:
மகாபலிபுரம், செய்யூர் (செங்கல்பட்டு) தலா 12 செ.மீ., சித்தார் (கன்னியாகுமரி, மரக்காணம், வானுார் (விழுப்புரம்),ஒட்டப்பிடாரம் (துாத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 9 செ.மீ., சிவகிரி (தென்காசி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), புதுச்சேரி, கன்னிமார், களியார் (கன்னியாகுமரி) தலா 8 செ.மீ., மயிலாடி (கன்னியாகுமரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), வளவனுார் (விழுப்புரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7 செ.மீ., சென்னை கலெக்டர் அலுவலகம், தண்டையார்பேட்டை, பெரம்பூர் (சென்னை), திண்டிவனம், கேளம்பாக்கம், திருப்போரூர் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை, குழித்துறை, சூரலக்கோடு, புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ.,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்
இன்று 9ம்தேதி முதல் 11ம் தேதி வரை: தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிகடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
இன்றும், நாளையும்: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.,10 மற்றும் 11ம் தேதி: தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று மற்றும் நாளை 10ம் தேதி:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று 9ம் தேதி:
தென்கிழக்கு அரபிக்கடல் eற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE