பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் பள்ளி வளாகத்தை சமுதாய கூடமாக்க எதிர்பார்ப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செல்லப்பகவுண்டன்புதுாரில் மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தை சமுதாயக்கூடம் அல்லது செவிலியர்கள் குடியிருப்பாக மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்டது செல்லப்பகவுண்டன்புதுார் கிராமம். இங்கு, கடந்த, 2004 - 05ல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செல்லப்பகவுண்டன்புதுாரில் மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தை சமுதாயக்கூடம் அல்லது செவிலியர்கள் குடியிருப்பாக மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்டது செல்லப்பகவுண்டன்புதுார் கிராமம். இங்கு, கடந்த, 2004 - 05ல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி திறக்கப்பட்டது.துவக்கத்தில், அரசு பள்ளிக்கு ஆர்வமாக வந்த மாணவர்கள், நாளடைவில் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு செல்ல துவங்கினர். இறுதியாக, இரு மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் என்ற நிலை இருந்தது. இதனால், கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு, பள்ளிக்கு வந்த இரு மாணவிகளும் வடசித்துார் பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றுச்சுவருடன் கூடிய பள்ளி வளாகத்தில் புதர் மண்டி, கட்டடங்கள் பராமரிப்பின்றி கிடந்தது.
சமீப நாட்களாக, ஊராட்சிகளில் கழிவு மற்றும் மழை நீரை நிலத்துக்குள் செலுத்தும் வகையிலான, உறிஞ்சு குழிகள் அமைகப்படுகின்றன.இக்குழிகளில் பயன்படுத்தும் கான்கிரீட் குழாய்கள் அமைக்கும் பணி, பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதனால், புதர்கள் அகற்றப்பட்டுள்ளது. பள்ளி கட்டடமும் தொழிலாளர்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தில், ஜல்லிக்கற்கள், சிமென்ட் மற்றும் எம்சாண்ட் கொட்டப்பட்டு, தொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. கட்டடங்கள் அழுக்கு படிந்து பராமரிப்பின்றி உள்ளன.இந்நிலையில், பள்ளி வளாகத்தை வீணாக்காமல், சமூதாயக்கூடமாகவோ, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவியர்களுக்கான குடியிருப்பாகவோ மாற்ற வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. மக்களின் ஆலோசனைக்கு செவி சாய்த்து, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X