குப்பையால் சுகாதார பாதிப்புபொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை அகற்றி, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.என்.சசிகலா,பொள்ளாச்சி.ரோடு முழுக்க பள்ளம்வால்பாறையில் இருந்து, சோலையாறு வழியாக செல்லும் நல்லகாத்து ரோட்டில், இடையிடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயமுள்ளது. ரோட்டை புதுப்பிக்க, நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வா. அருண்,வால்பாறை.பாலத்தில் களைச்செடிகள்கிணத்துக்கடவு, மதுக்கரை ஒன்றியங்களை இணைக்கும், சொக்கனுார், கண்ணமநாயக்கனுார் இடையே அமைந்துள்ள பாலத்தின் பக்கவாட்டில் களைச்செடிகள் வளர்ந்துள்ளது. அப்பகுதி முழுவதும் புதர் சூழ்வதற்குள், களைச்செடிகளை அகற்ற வேண்டும்.எஸ். செந்தில்குமார்,கண்ணமநாயக்கனுார்.போதை ஆசாமிகளால் அச்சம்பொள்ளாச்சி - நடுப்புணி ரோட்டில், மாலை மற்றும் இரவு நேரங்களில், மது போதையில் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. ரோட்டில் தாறுமாறாக வாகனங்களை இயக்குவதால், மற்ற வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது.கே.சரவணன்,பொள்ளாச்சி.நடைபாதையில் ஆக்கிரமிப்புபொள்ளாச்சியில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள நடைபாதையில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. இதனால், நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாந்தி,பொள்ளாச்சி.-மின்-----விளக்குகள் எரியவில்லைமடத்துக்குளம் அருகே மேற்கு நீலம்பூர் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் தெருவிளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதிக்குள்ளாகின்றனர். அதில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கி.திருமலைசாமி,மேற்கு நிலம்பூர்.ரோடு சேதத்தால் விபத்துமடத்துக்குளம் தொடங்கி உடுமலை வரை, தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-க.சுப்புலு,மடத்துக்குளம்.இருளில் மூழ்கும் கிராமம் குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி பிரிவில் இருந்து, கிராமத்துக்கு செல்லும் ரோட்டில், தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் இருள்சூழ்ந்து விடுகிறது. அப்பகுதி மக்களும் அவதிப்படுகின்றனர். எம். செந்தில்குமார்,உடுமலை.பாதுகாப்பு கேள்விக்குறி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி முன், குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை கடக்க எவ்வித வசதியும் இல்லாததால், பள்ளி, மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எஸ். தங்கவேல், உடுமலை. ரோடு படுமோசம்உடுமலை மாரியம்மன் கோவில் அருகில், திருப்பூர் ரோடு பிரியும் இடத்தில், ரோடு, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ. சண்முகப்பிரியா, உடுமலை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE