செய்தி செய்தி

தமிழ்நாடு

திருச்செந்துார், ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., கடிதம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: ரயில்கள் இயக்கம் குறித்து, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., விடம் ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர், எம்.எல்.ஏ., ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்து, ரயில்கள் இயக்கம் குறித்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.சென்னை

பொள்ளாச்சி: ரயில்கள் இயக்கம் குறித்து, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., விடம் ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர், எம்.எல்.ஏ., ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்து, ரயில்கள் இயக்கம் குறித்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - கோவை வழியாக சென்னைக்கு இயக்க வேண்டும்.கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, முன்பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும். கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க வேண்டும்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி வழியாக திருச்செந்துாருக்கு மீண்டும் ரயில் இயக்க வேண்டும். கோவை - ராமேஸ்வரம் இரவு நேர எக்ஸ்பிரஸ், கோவை - துாத்துக்குடி தினசரி அதிவேக பயணிகள் ரயில், கோவை - செங்கோட்டைக்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு ரயில் இயக்க வேண்டும். மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பட்ட கோவில்பாளையம், செட்டிபாளையம் ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்க வேண்டும்.கிணத்துக்கடவில், முன்பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும். பாதியில் நிற்கும் நடை மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X