செய்தி செய்தி

தமிழ்நாடு

வி.எச்.பி., நுாதன போராட்டம் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி

Added : நவ 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: சூரசம்ஹார விழாவையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், என பொள்ளாச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் நுாதன வழிபாடு நடத்தி வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை, கோவில் வளாகத்தினுள் சூரசம்ஹார நிகழ்வு நடக்கும் என, கோவில்
 வி.எச்.பி., நுாதன போராட்டம் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி

பொள்ளாச்சி: சூரசம்ஹார விழாவையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், என பொள்ளாச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் நுாதன வழிபாடு நடத்தி வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை, கோவில் வளாகத்தினுள் சூரசம்ஹார நிகழ்வு நடக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். கோவிலினுள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில், கோவில் முன் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.கந்த சஷ்டி கவசம் படித்தும், கோவில் நுழைவு வாயிலை திறந்து, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தியும் நுாதன முறையில் போராடினர்.விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் பஜ்ரங்தல் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீசார் பேச்சு நடத்தி, மதியம், 2:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அனுமதி வழங்க, நடவடிக்கை எடுத்தனர்.இதனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X