செய்தி செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக வார விழா போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
உடுமலை: தேசிய நுாலக வார விழாவையொட்டி நடத்தப்படும் போட்டிகளில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை கிளை நுாலகம் எண் 2ல், நுாலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நுாலக வார விழா, வரும், 14ல், துவங்கி, 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.அவ்வகையில், மகாகவி பாரதியார் நுாற்றாண்டு விழாவுடன் இணைந்து, கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியும்

உடுமலை: தேசிய நுாலக வார விழாவையொட்டி நடத்தப்படும் போட்டிகளில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை கிளை நுாலகம் எண் 2ல், நுாலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நுாலக வார விழா, வரும், 14ல், துவங்கி, 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.அவ்வகையில், மகாகவி பாரதியார் நுாற்றாண்டு விழாவுடன் இணைந்து, கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது.மேலும், புதிய புத்தகங்களை உள்ளடக்கி கண்காட்சி, வாசிப்பு குறித்து கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.பல்வேறு தலைப்புகளின் கீழ் நடத்தப்படும் இப்போட்டிகளில், 5 முதல், 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். அதேபோல், ஓவியப் போட்டியில், அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை, வரும், 18ம் தேதிக்குள், நுாலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நிறைவு நாளில், பரிசளிப்பு விழா நடத்தப்படும்.குறிப்பாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.இதற்கான ஏற்பாடுகளை, நுாலகர்கள் மற்றும் நுாலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். விவரம் அறிய, 99440 66681, 86673 86586 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X