சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீரின் தன்மை குறித்து சுகாதாரத்துறை ஆய்வு

Added : நவ 09, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: கிராம குடிநீர் தொட்டிகளில் தேக்கப்படும், நீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து, ஆய்வு மேற்கொண்டனர்.பருவமழை காலங்களில், தேங்கி நிற்கும் நீரில் கிருமிகள் தோன்றி, நீரை பருகுவோர், வயிற்று போக்கு, டைப்பாய்டு காய்ச்சல், காலரா, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தடுக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, மக்களிடம்

கிணத்துக்கடவு: கிராம குடிநீர் தொட்டிகளில் தேக்கப்படும், நீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து, ஆய்வு மேற்கொண்டனர்.பருவமழை காலங்களில், தேங்கி நிற்கும் நீரில் கிருமிகள் தோன்றி, நீரை பருகுவோர், வயிற்று போக்கு, டைப்பாய்டு காய்ச்சல், காலரா, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தடுக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, மக்களிடம் அறிவுறுத்திய சுகாதார ஆய்வாளர்கள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில் அமைந்துள்ள தரைமட்ட, மேல்நிலை தொட்டிகளில் இருக்கும் நீரின் தன்மை, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.சில தொட்டிகளில் குளோரின் கரைசல் கரைக்கப்பட்டது. ஆய்வில், சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், முத்துக்கிருஷ்ணன், செல்வம், சரவணகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X