சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: மத்திய, மாநில அரசுகள் உறவில் விரிசல் ஏற்படும் வகையில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி தருவோர் மீது அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.'டவுட்' தனபாலு: சமூக வலைதளங்களை அமைச்சர்கள் பயன்படுத்தக் கூடாது என சட்டம் கொண்டு வந்தால், இந்த பிரச்னை

'டவுட்' தனபாலு

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: மத்திய, மாநில அரசுகள் உறவில் விரிசல் ஏற்படும் வகையில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி தருவோர் மீது அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

'டவுட்' தனபாலு: சமூக வலைதளங்களை அமைச்சர்கள் பயன்படுத்தக் கூடாது என சட்டம் கொண்டு வந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காதோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வந்துள்ளது. ஏனெனில், சமூக வலைதளங்களில் பதில் அளித்தவர்கள் பலர், இப்போது, 'உள்ளே' உள்ளனர். இனிமேலாவது சமூகவலைதள பயனாளர்களை காப்பாற்ற, அத்தகைய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா?


அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி:
வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலெர்ட்' கொடுத்தும், தி.மு.க., அரசு மெத்தனமாக செயல்பட்டதாலேயே சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த, 'அம்மா' உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கியது போல், இப்போது மழை, வெள்ளத்தின்போதும், அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்காதது ஏன்?

'டவுட்' தனபாலு: 'அம்மா' உணவகத்தின் ஊழியர்கள் பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்ட பிறகு, குறைந்த அளவு ஊழியர்களை வைத்து, மக்களுக்கு இலவசமாக உணவு கொடுக்க முடியாது என, தி.மு.க., அரசு நினைத்திருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. அதுபோல, நகர்வலம் வந்த முதல்வர் வாகனத்துடன் அமைச்சர்கள் சிலர் தொங்கிச் சென்றதால், அவர்களால் நிவாரண பணிகளில் ஈடுபட முடியாமல் போனதோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதாக மத்திய அரசு, என்.ஐ.ஓ.டி., ரேடார் மூலம் கணித்து மூன்று மாதங்களாக தமிழக அரசை எச்சரிக்கை செய்தது. இதை, ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போதும் மழைநீரால் சென்னை தத்தளித்தது. தற்போது முதல்வராக இருக்கும் போதும் அதே நிலை தான் நீடிக்கிறது.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முதல்வருக்கும், சென்னைக்கும் ராசி இல்லை என சொல்ல வருகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததற்கு பதில், மாநில அரசின் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தால், இந்த திராவிட அரசு கேட்டிருக்குமோ என்ற, 'டவுட்டும்' வருகிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-நவ-202119:28:58 IST Report Abuse
D.Ambujavalli 'சும்மாவே ஆடும் எதோ ஒன்று கொட்டுக்கேட்டால் விடுமா?' கிடைத்துவிட்டது கனமழை இன்னும் ரெண்டு மாசம் இதை வைத்து ஓட்டலாம் அது சரி ரெண்டு வருஷத்துக்கு முன் கட்டிய தடுப்பணை இரண்டு முறை உடைந்து உங்கள் அரசின் 'சாதனைக்கு' சான்றிதழ் அளிக்கிறது அதற்கு முதலில் பொறுப்பேற்று பதில் கூற முடியுமா ?
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
10-நவ-202109:14:58 IST Report Abuse
rajan சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதாக மத்திய அரசு, என்.ஐ.ஓ.டி., ரேடார் மூலம் கணித்து மூன்று மாதங்களாக தமிழக அரசை எச்சரிக்கை செய்தது. இதற்கான ஆதாரத்தை புள்ளி விவரங்களோடு வெளியிட்டால் எல்லோருக்கும் தெரியும் இல்லையென்றால் வழக்கம்போல பொய் சொல்லும் ஒரே கட்சி பிஜேபி என்பது நிரூபணமாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X