சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

திறப்பு விழா சர்ச்சையில் உருளும் 'தலைகள்!'

Added : நவ 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திறப்பு விழா சர்ச்சையில் உருளும் 'தலைகள்!'குடை பிடித்தபடியே, நாயர் கடைக்கு வந்த குப்பண்ணா, ''மழை காலத்துல ரொம்ப கவனமா இருக்கணும் ஓய்...'' என்றார்.நாயர் கொடுத்த இஞ்சி டீயை பருகியபடியே அந்தோணிசாமி, முதல் தகவலை சொல்ல துவங்கினார்...''மதுரை -புது நத்தம் சாலையில பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்துல, 70 கோடி ரூபாய் செலவுல, 'கருணாநிதி' நுாலகம் அமைக்க

 டீ கடை பெஞ்ச்


திறப்பு விழா சர்ச்சையில் உருளும் 'தலைகள்!'



குடை பிடித்தபடியே, நாயர் கடைக்கு வந்த குப்பண்ணா, ''மழை காலத்துல ரொம்ப கவனமா இருக்கணும் ஓய்...'' என்றார்.நாயர் கொடுத்த இஞ்சி டீயை பருகியபடியே அந்தோணிசாமி, முதல் தகவலை சொல்ல துவங்கினார்...

''மதுரை -புது நத்தம் சாலையில பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்துல, 70 கோடி ரூபாய் செலவுல, 'கருணாநிதி' நுாலகம் அமைக்க போறாங்க...

''சமீபத்தில் மதுரையில் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின், அங்கு நுாலகம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டாருங்க...

''நுாலக கட்டடத்துக்கான வரைபடத்தை பொதுப் பணித் துறை மற்றும் தனியார் நிறுவன பொறியாளர்களிடம் அரசு கேட்டு
இருந்ததுங்க...

''அதுல, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வரைஞ்ச வரைபடத்தை முதல்வர் தேர்வு செஞ்சாரு... இதனால அவங்க சந்தோஷமாக இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ஏதும் அசம்பாவிதம் நடக்குறதுக்குள்ள நடவடிக்கை எடுக்கணும் பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்ன சொல்லுதீரு...'' என கேட்டார், அண்ணாச்சி.

''சேலம் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில இருக்குற துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதமடைந்ததால், சுகாதார பணியாளர்கள் யாரும் அங்கே தங்குறதில்லை... அந்த கட்டடம் பூட்டியே இருந்தது பா...

''இப்போது அதை சட்டவிரோதமாக திறந்து, வடமாநிலத்தைச் சேர்ந்த, 10 பேர் அங்கே தங்கியிருக்காங்க... பக்கத்துல இருக்குற அரசு கட்டடத்துல இருந்து மின்சாரமும் எடுத்து பயன்படுத்துறாங்க பா...

''சட்ட விரோத செயல் நடக்கவும், அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு... அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கணும் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''காமெடி நடிகர் கவுண்டமணி மாதிரி, 'அது நான் இல்லைங்க...'ன்னு புலம்புதாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''யாரு, என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''கோவை தொண்டாமுத்துார் அரசு கலை கல்லுாரியில புதிய கட்டடம் திறப்பு விழா சமீபத்துல நடந்துச்சு... முதல்வர் ஸ்டாலின், இதை காணொலி மூலம் திறந்து வைச்சார் வே...

''இதையடுத்து அங்கு வந்த, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான வேலுமணிக்கு பட்டாசு வெடித்து, தடபுடலாக வரவேற்பு கொடுத்தாவ வே...

''அவரும், குத்துவிளக்கேற்றி மீண்டும் திறப்பு விழா நடத்தினார்... இது, சர்ச்சையை கிளப்பி இருக்கு வே...

''ஆளுங்கட்சி சார்புல யாரும் இல்லாத போது, அ.தி.மு.க.,வினர் அதிரடியாக இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்காவ... இவர்களுக்கு அழைப்பு விடுத்தது யாருன்னு தெரியாம, கல்லுாரி முதல்வர், பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஆகியோரோட, 'தலை உருளுதாம்' வே...

''இது பொதுப் பணித் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிங்க... சத்தியமா நாங்க யாரையும் கூப்பிடலைங்கன்னு அவங்க பதறிக்கிட்டு விளக்கம் கொடுக்காவ வே...

''இதெல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சு தான் கலெக்டர், உயர்கல்வித் துறை அதிகாரிகள் யாரும், தொண்டாமுத்துார் பக்கமே தலை வச்சி படுக்கலையாம் வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்; பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-நவ-202119:37:45 IST Report Abuse
D.Ambujavalli கட்டிடம் இடிந்து உயிர் சேதம் ஆனபின், ஆற அமர 'யார் சாவி கொடுத்தார்? தங்கியவர்கள் யார் என்று உடல்களுடன் கேஸையும் 'போஸ்ட்மார்ட்டம் ' செய்வார்கள் அரசு யந்திரத்தின் அபார சுறுசுறுப்பு ஆச்சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X