இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 09, 2021 | கருத்துகள் (1)
Share
நவ., 10, 2013நெல்லை மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில், 1931ல் பிறந்தவர், புஷ்பா தங்கதுரை; இயற்பெயர், வேணுகோபாலன். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், ஹிந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, கட்டுரை, 'டிவி' தொடர்கள் என, பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்களை

இதே நாளில் அன்று


நவ., 10, 2013



நெல்லை மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில், 1931ல் பிறந்தவர், புஷ்பா தங்கதுரை; இயற்பெயர், வேணுகோபாலன். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், ஹிந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, கட்டுரை, 'டிவி' தொடர்கள் என, பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். தன் இயற்பெயரில், ஆன்மிக கட்டுரைகள் எழுதினார்.
'நீ நான் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' உட்பட இவரது பல படைப்புகள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இவரது கதைகள் படங்களாகவும், 'டிவி' தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.'ஊதாப்பூ, ஆன்மிகம்' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை. ௨௦௧௩ நவ., ௧௦ல், தன் 82வது வயதில் இயற்கை எய்தினார்.
எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X