போதிய பஸ் வசதி இல்லை: பயணிகள் அவதி| Dinamalar

போதிய பஸ் வசதி இல்லை: பயணிகள் அவதி

Added : நவ 09, 2021
Share
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.பந்தலுார் தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலானோர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே ஊருக்கு வருகின்றனர்.பண்டிகை முடிந்து, மீண்டும்

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.பந்தலுார் தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலானோர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே ஊருக்கு வருகின்றனர்.பண்டிகை முடிந்து, மீண்டும் பணிக்கு செல்ல பயணிகள் வந்த போது, அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தராத நிலையில், அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல பயணிகள் இடம் கிடைக்காத காரணத்தால், மீண்டும் வீட்டுக்கு சென்று, இரு நாட்கள் தாமதமாக பிற இடங்களுக்கு சென்றனர்.எனவே, வரும் பண்டிகை நாட்களில், கூடுதலாக பஸ் இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X