சில வரி செய்திகள்...: இந்தியா

Added : நவ 09, 2021
Share
Advertisement
கொலை மிரட்டல்: டாக்டர் கைதுகோல்கட்டா: மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயா, முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக உள்ளார். கோல்கட்டா பல்கலை துணை வேந்தரான இவரது மனைவி சோனாலிக்கு, சமீபத்தில் வந்த கடிதத்தில் 'உங்கள் கணவர் கொல்லப்படுவார்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும்
 சில வரி செய்திகள்...: இந்தியா

கொலை மிரட்டல்: டாக்டர் கைது

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயா, முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக உள்ளார். கோல்கட்டா பல்கலை துணை வேந்தரான இவரது மனைவி சோனாலிக்கு, சமீபத்தில் வந்த கடிதத்தில் 'உங்கள் கணவர் கொல்லப்படுவார்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் டாக்டர் உட்பட மூவரை கைது செய்தனர். இது போல பலருக்கும் கடிதம் அனுப்பியுள்ள டாக்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாக போலீசார் கூறி உள்ளனர்.

லஞ்ச அதிகாரி சிக்கினார்

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நடக்கும் 1.74 கோடி ரூபாய் பணிகளுக்கான ஒப்பந்ததாரரிடம், செயற்பொறியாளர் ராகேஷ் குமார் சிங்கால், 55, தனக்கு 17 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், 5 லட்சம் ரூபாயை ஏற்கனவே வாங்கி யுள்ளார். அடுத்ததாக, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும், 11.5 லட்சத்திற்கான, 'செக்' ஆகியவற்றை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராகேஷ் குமாரை கைது செய்தனர்.

6 மாணவர்கள் கைது

கண்ணுார்: கேரளாவின் கண்ணுாரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் அன்ஷாத், சமீபத்தில் மாணவியரிடம் பேசியுள்ளார். ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அவரை கல்லுாரியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன் 'ராகிங்' செய்துள்ளனர். இதில் மயங்கிய அன்ஷாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராகிங்கில் ஈடுபட்ட ஆறு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு சாரதா மரணம்

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு நகரைச் சேர்ந்தவர் சாரதா, 84. பிரபல நாடக கலைஞரான இவர், மலையாள திரைப்படங்கள் மற்றும் 'டிவி' தொடர்களிலும் நடித்து வந்தார். திரையுலகினரால் கோழிக்கோடு சாரதா என அழைக்கப்பட்ட இவர், முதுமை தொடர்பான உடல் பாதிப்புகளால் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார்.

புலம்பெயர் பறவைகள் பலி

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் கர்படா கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 80க்கும் மேற்பட்ட குர்ஜன் பறவைகள், கடந்த சில நாட்களில் வைரஸ் பாதிப்பால் இறந்தன. தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை டாக்டர்களுடன் வந்து, 100க்கும் மேலான பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் தாக்குதலால் பறவைகள் பலியாகி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X