மாலிக் மீது போலீசில் வான்கடே தந்தை புகார்

Added : நவ 09, 2021
Share
Advertisement
மும்பை:மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவின் தந்தை தியான்தேவ் வான்கடே போலீசில் புகார் அளித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டுஇங்குள்ள

மும்பை:மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவின் தந்தை தியான்தேவ் வான்கடே போலீசில் புகார் அளித்துள்ளார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


குற்றச்சாட்டு



இங்குள்ள மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் வழக்கில் சமீபத்தில் கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

வான்கடே மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக், தினமும் புதிது புதிதாக புகார்களை கூறி வருகிறார். சமீர் வான்கடேவின் மைத்துனி போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிமாக இருந்துவிட்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.மானநஷ்ட வழக்குஇதையடுத்து நவாப் மாலிக் மீது, சமீர் வான்கடேவின் தந்தை தியான்தேவ் வான்கடே, 1.25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில் மும்பை உதவி போலீஸ் கமிஷனரிடம் தியான்தேவ் வான்கடே அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:நவாப் மாலிக் எங்களது ஜாதி குறித்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார். பத்திரிகைகள், 'டிவி' சேனல்களில் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் தவறான மற்றும் இழிவான தகவல்களை வெளியிடுகிறார்.


நடவடிக்கை



எனவே அவர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இரண்டாவது நாளாக செய்லியிடம் விசாரணை ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி, அவரது கார் டிரைவரும், மெய்க்காப்பாளருமான பிரபாகர் செய்ல் உட்பட எட்டு பேர், முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

முதன்மை சாட்சியான பிரபாகர் செய்ல், போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:ஷாருக்கின் மேலாளரை, கோசாவி உட்பட இருவர் சந்தித்து பேசி, வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க, 25 கோடி ரூபாய் பேரம் பேசினர். இதில் 8 கோடி ரூபாயை வான்கடேவிடம் தர வேண்டும் என, ஷாருக் மேலாளரிடம் கோசாவி தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் கியானேஸ்வர் சிங் தலைமையில் ஐந்து அதிகாரிகள் குழு, மும்பையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விசாரணை குழு முன், பிரபாகர் செய்ல் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் செய்லியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X