சுமித்ரா மஹாஜனுக்கு பத்ம பூஷன் விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுமித்ரா மஹாஜனுக்கு 'பத்ம பூஷன்' விருது

Added : நவ 09, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி:எட்டு முறை எம்.பி., யாக பதவி வகித்தவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மஹாஜனுக்கு, 'பத்ம பூஷன்' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்தவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில்
 சுமித்ரா மஹாஜனுக்கு 'பத்ம பூஷன்' விருது

புதுடில்லி:எட்டு முறை எம்.பி., யாக பதவி வகித்தவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மஹாஜனுக்கு, 'பத்ம பூஷன்' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்தவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடந்தது.அதன் தொடர்ச்சியாக நடந்த விழாவில், ஒடிசாவை சேர்ந்த மூத்த சிற்பி சுதர்சன் சாஹு, கர்நாடகாவின் மூத்த மருத்துவரும், கல்வியாளருமான பெல்லி மோனப்பா ஹெக்டே, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்த விருதை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் பெற்றுக்கொண்டார்.எட்டு முறை எம்.பி.,யாக பதவி வகித்தவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மஹாஜன், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

மறைந்த அசாம் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான தருண் கோகோய்க்கான பத்ம பூஷன் விருதை, அவரது மனைவி பெற்றுக் கொண்டார். கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, கோவையைச் சேர்ந்த மறைந்த சுப்பிரமணியன், சமூக சேவகர் ஜிதேந்தர் சிங் ஷண்டி, பழங்குடியின நாட்டுப்புற கலாசார அறிஞர் கபில் திவாரி, தடகள வீரர் கே.ஒய்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X