போபால் மருத்துவமனையில் தீ பச்சிளம் குழந்தைகள் 4 பேர் பலி

Added : நவ 09, 2021
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தின் போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.அதிர்ச்சிதலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனை, பல்வேறு சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் தளத்தில் உள்ள
 போபால் மருத்துவமனையில் தீ பச்சிளம் குழந்தைகள் 4 பேர் பலி

போபால்:மத்திய பிரதேசத்தின் போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.அதிர்ச்சிதலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனை, பல்வேறு சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது.

அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகளைத் துவங்கினர். மின் தடை மற்றும் புகை மண்டலம் காரணமாக குழந்தைகள் இருக்குமிடம் தெரியாமல் அவர்கள் தவித்தனர். இந்த குழப்பத்தின் காரணமாக சிலர் தங்கள் குழந்தைக்கு மாற்றாக வேறு நபரின் குழந்தைகளை துாக்கிச் சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். அதற்கு முன் தீயில் கருகி நான்கு குழந்தைகள் பலியாயினர்.4 லட்சம் ரூபாய்மீட்கப்பட்ட 36 குழந்தைகளுக்கு வேறு பிரிவில் சிகிச்சை தொடர்கிறது.

மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறும்போது, ''மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என்றார்.விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங், ''பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என, அறிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளாக தீ பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X