இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம்

Updated : நவ 11, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி :இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக அழைக்கப்படும், 'பை நவ் பே லேட்டர்'. அதாவது, 'இப்போது வாங்குங்கள்; பிறகு செலுத்துங்கள்' எனும் வணிகம்.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை எதுவுமின்றி, பொருட்களை எளிதாக தவணை திட்டத்தில் வாங்குவதற்கு, இப்போது பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்த துவங்கி
இந்திய கடன் சந்தை, புதிய வணிகம்

புதுடில்லி :இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக அழைக்கப்படும், 'பை நவ் பே லேட்டர்'. அதாவது, 'இப்போது வாங்குங்கள்; பிறகு செலுத்துங்கள்' எனும் வணிகம்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை எதுவுமின்றி, பொருட்களை எளிதாக தவணை திட்டத்தில் வாங்குவதற்கு, இப்போது பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
குறிப்பாக, 'ஆன்லைன்' வாயிலாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இந்த திட்டம் மிகவும் ஈர்த்து வருகிறது.

முன்பணம் எதுவும் செலுத்தாமல், உடனடியாக பொருட்களை வாங்க முடியும் என்பதாலும்; இக்கடனுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வட்டி எதுவும் கிடையாது என்பதாலும், இந்த திட்டத்துக்கு மிக வேகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.தற்போது 25 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் இந்த பி.என்.பி.எல்., தொழில், 2026ல் 3.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக ஏற்றம் பெறும் என, ஆராய்ச்சி நிறுவனமான 'ரெட்சீர்' தெரிவித்து
உள்ளது.மேலும் பி.என்.பி.எல்., பயனர்கள் எண்ணிக்கை, தற்போது 1 - 1.5 கோடியாக இருப்பது, 2026ல் 8 - 10 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பி.என்.பி.எல்., நிறுவனங்கள், தற்போது அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்குகின்றன.இது கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கும் தொகையைவிட குறைவாக உள்ளது. எனவே, கிரெடிட் கார்டு சந்தையை உலுக்குவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், கொரோனாவுக்கு பிறகு அதிகம் பேர் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்க துவங்கி உள்ளனர். இதனையடுத்து, எளிதான கடன் வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், இப்பிரிவில் இன்னும் நிறைய நிறுவனங்கள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
10-நவ-202109:46:17 IST Report Abuse
Paraman கந்து வட்டி, மீட்டர் வட்டி, மார்க்கெட் வட்டி வியாபாரம் செய்பவர்களை அரசு கைது செய்யும். இதனால் தற்கொலை செய்து கொண்டு சாக போகிறவர்கள், ஏமாற்றப்பட்டு வாழ்க்கையையே தொலைக்கப்போகிறவர்கள் பல லட்சம் பேரு நம் நாட்டில் விரைவில் எதிர்பாருங்கள். தடை செய்யப்பட்ட பாண் பராக் மற்றும் போதை வஸ்துக்கள், 'சோடா வாட்டர்' என்ற பெயரில் விளம்படுத்தப்பட்டு எந்த தங்கு தடைகளுமின்றி நாடு முழுவுதும் விற்பனை அமோகம் இந்த நாடும், இதன் முட்டாள் மக்களும் அணைத்து வகையிலும் ஒரு மாபெரும் சீரழிவு, வீழ்ச்சியை நோக்கி மிக விரைவாக பயணப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
10-நவ-202107:19:07 IST Report Abuse
Barakat Ali இந்த வகையான பிசினஸ் கொரோனா காலத்தில்தான் வளர்ச்சி அடைந்துள்ளது கொரோனாவால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202106:23:58 IST Report Abuse
Kasimani Baskaran ஆதர் வைத்திருப்போர் தங்களது கிரெடிட் ஸ்கோருக்கு பயந்து ஒழுக்கமாக பணம் கட்டிவிடுவார்கள். ஆதர் இல்லாதவர்களில் வேண்டுமென்றே கம்பி நீட்டுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X