மழை வெள்ள காலத்தில் கவனம்: மக்களிடையே தீவிர விழிப்புணர்வு| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

மழை வெள்ள காலத்தில் கவனம்: மக்களிடையே தீவிர விழிப்புணர்வு

Added : நவ 09, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வெள்ளம் மற்றும் தீ விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் (போக்குவரத்து) பிரபாகரன் தலைமையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்து துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து,

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வெள்ளம் மற்றும் தீ விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் (போக்குவரத்து) பிரபாகரன் தலைமையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்து துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து, தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: வெள்ள காலத்துக்கு முன், வெள்ள அபாய எச்சரிக்கை பெறப்படும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து, துண்டுப்பிரசுரம் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.வருவாய்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மின்சார வாரிய உள்ளூர் அலுவலர்களின் தொலைபேசி மற்றும் மொபைல்போன் எண்களை வைத்திருக்க வேண்டும்.இடி, மின்னலின் போது, மொபைல்போன் பயன்படுத்த கூடாது. தொலைக்காட்சி இணைப்பை துண்டிக்க வேண்டும். மரங்கள் கீழே நிற்க கூடாது. தாழ்வான பகுதியில் வசிப்பர்கள், காலதாமதமின்றி கால்நடை மறறும் வளர்ப்பு பிராணிகளுடன் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும்.வெள்ள நீரிலோ அல்லது அதன் அருகிலோ சிறுவர்களை விளையாட அனுமதிக்க கூடாது. மின் ஒயர் அறுந்து கிடந்தால் உடனே மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை கிருமி நீக்கம் செய்ய பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பயன்படுத்தலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X