பொது செய்தி

தமிழ்நாடு

முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை:சூரசம்ஹார விழாவையொட்டி பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. முத்துக்குமார சுவாமிக்கு, சத்ரு சம்ஹார வேள்வி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. விசாலாட்சி அம்பிகைக்கு, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, சக்திவேல் வாங்குதல்,
 முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

பரங்கிப்பேட்டை:சூரசம்ஹார விழாவையொட்டி பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. முத்துக்குமார சுவாமிக்கு, சத்ரு சம்ஹார வேள்வி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. விசாலாட்சி அம்பிகைக்கு, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, சக்திவேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நடந்தது. பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை, பாபு குருக்கள் செய்திருந்தார்.

புவனகிரி

புவனகிரி வெள்ளியம்பலம் மடத்தில் உள்ள முருகனுக்கு சஷ்டியொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசுப்பிரமணியன் குழுவினர் செய்திருந்தனர். பெருமத்துார் ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X