தண்ணீர் நிரப்பியதும் டேங்க் 'தொப்!': தரமில்லாத பணியால் அவலம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
உடுமலை: கண்ணம்மநாயக்கனுாரில், புதிதாக அமைக்கப்பட்ட இரு 'சின்டெக்ஸ் டேங்க்'கில், தண்ணீர் நிரப்பப்பட்ட சில மணி நேரத்திலேயே விரிசல் ஏற்பட்டு, உடைந்து விழுந்தது. உடுமலை ஒன்றியம், கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம குடியிருப்புகளின், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, ஆங்காங்கே, ஒன்றிய பொது நிதி உட்பட பல்வேறு
 தண்ணீர் நிரப்பியதும் டேங்க் 'தொப்!':  தரமில்லாத பணியால் அவலம்



உடுமலை: கண்ணம்மநாயக்கனுாரில், புதிதாக அமைக்கப்பட்ட இரு 'சின்டெக்ஸ் டேங்க்'கில், தண்ணீர் நிரப்பப்பட்ட சில மணி நேரத்திலேயே விரிசல் ஏற்பட்டு, உடைந்து விழுந்தது.
உடுமலை ஒன்றியம், கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம குடியிருப்புகளின், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, ஆங்காங்கே, ஒன்றிய பொது நிதி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.அதன்படி, கிராமத்தை ஒட்டி தோட்டத்து சாளை பகுதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, இரு சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது. நேற்று, குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால், நான்கு மணி நேரத்தில், இரு 'டேங்க்'கிலும் விரிசல் ஏற்பட்டு, திடீரென உடைந்து சரிந்தது. டேங்க் வைப்பதற்காக கட்டப்பட்ட கான்கீரிட் பீடமும் விரிசல் விட்டு காணப்படுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விரிசல் ஏற்படுவதற்கு, தரமற்ற சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டதே காரணம் என, புகார் தெரிவித்தனர்.இது குறித்து உடுமலை ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'கிராமங்கள்தோறும், சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பணிகள், இன்னும் முழுமை பெறவில்லை'.'பணியின் போது, குழாய் மற்றும் டேங்கில் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றியமைக்கப்படும். அவ்வகையில், விரிசல் ஏற்பட்ட சின்டெக்ஸ் டேங்கிற்கு பதிலாக, புதிய டேங்க் அமைக்கப்படும். பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X