செய்தி செய்தி

தமிழ்நாடு

தேவனூர்புதூர் பஸ் ஸ்டாப் மேம்பாடு நிதி: திரும்ப பெறப்பட்டதை விடுவிக்க கோரிக்கை

Added : நவ 09, 2021
Share
Advertisement
உடுமலை: தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாப் அமைக்க நிதி ஒதுக்கி, திரும்பப் பெறப்பட்ட தொகையை, மீண்டும், விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை -ஆனைமலை ரோட்டில் உள்ள தேவனுார்புதுாருக்கு, உடுமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள மூன்று ரோடு சந்திப்பில், பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.அங்கு, போதிய இடவசதி

உடுமலை: தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாப் அமைக்க நிதி ஒதுக்கி, திரும்பப் பெறப்பட்ட தொகையை, மீண்டும், விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை -ஆனைமலை ரோட்டில் உள்ள தேவனுார்புதுாருக்கு, உடுமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள மூன்று ரோடு சந்திப்பில், பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.அங்கு, போதிய இடவசதி ஏற்படுத்தப்பட்டும், பயணிகள், இருக்கையில் அமர்ந்து, காத்திருக்கும் வகையில், பஸ் ஸ்டாப் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பஸ் ஸ்டாப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, அதற்கான நிதி திரும்பப்பெறப்பட்டது.ஊராட்சித்தலைவர் செழியன் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து, தேவனுார்புதுாருக்கு 25க்கும் அதிகமான பஸ்கள் வந்து திரும்புகின்றன. இங்கு, பஸ் ஸ்டாண்ட் அமைக்க போதிய இடவசதியில்லை. அதற்கு மாறாக, பஸ் ஸ்டாப் அமைக்க, திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி, மீண்டும் திரும்பப் பெறப்பட்டது. தற்போது, மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X