பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்கள் சேதம் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 09, 2021
Share
Advertisement
சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி, பருத்தி, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் க.செல்லம்பட்டு, கொசப்பாடி, ச.செல்லம்பட்டு,அரசம்பட்டு, பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் பயிர்கள் நீரில்
 பயிர்கள் சேதம் எம்.எல்.ஏ., ஆய்வு

சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி, பருத்தி, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.

சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் க.செல்லம்பட்டு, கொசப்பாடி, ச.செல்லம்பட்டு,அரசம்பட்டு, பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ஒன்றிய சேர்மன்திலகவதி நாகராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று, பயிர்களை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X