பழுதான மதகுகள் சீரமைக்க | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான மதகுகள் சீரமைக்க

Added : நவ 09, 2021
Share
அவலுார்பேட்டை:மேல்மலையனுார் ஏரியில் பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனுார் பகுதியில் தாயனுார் பகுதியை உள்ளிடக்கிய 915 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் மேல்மலையனுார், தாயனுார், சீயப்பூண்டி, மாம்பட்டு, தொரப்பாடி, செவலபுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் ஏரியில் பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேல்மலையனுார் பகுதியில் தாயனுார் பகுதியை உள்ளிடக்கிய 915 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் மேல்மலையனுார், தாயனுார், சீயப்பூண்டி, மாம்பட்டு, தொரப்பாடி, செவலபுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்த ஏரியில் 4 இடங்களில் மதகுகள் உள்ளன.

இவற்றில் மேல்மலையனுார் துர்க்கை அம்மன் கோவில் அருகிலும், தாயனுார் ஜடாமுனீஸ்வரர் கோவில் அருகிலும் உள்ள பழுதான மதகுகளில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்நிலையில் அமைச்சர் மஸ்தான், ஏரியை ஆய்வு செய்தார். அப்போது பழுதான மதகுகளை சீரமைக்கவும், ஏரி அருகே குப்பைகள் கொட்டுவதைத் தவிர்த்து மாற்று இடத்தில் கொட்டவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் கனகராஜ் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X