சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 வீடுகளில் 33 சவரன் நகை கொள்ளை திண்டிவனம், கிளியனுாரில் துணிகரம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
வானுார்:கிளியனுார் மற்றும் திண்டிவனத்தில் 3 வீடுகளில் 33 சவரன் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த எறையானுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 52; இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா, 42; தாய் பாலாமணி, 63; என்பவருடன் வசித்து வருகிறார்.கல்பனாவும், பாலாமணியும், கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, தேனியில் நடந்த உறவினரின்

வானுார்:கிளியனுார் மற்றும் திண்டிவனத்தில் 3 வீடுகளில் 33 சவரன் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிளியனுார் அடுத்த எறையானுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 52; இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா, 42; தாய் பாலாமணி, 63; என்பவருடன் வசித்து வருகிறார்.கல்பனாவும், பாலாமணியும், கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, தேனியில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றனர்.பின் நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

கண்ணணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 63; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றிருந் தார்.நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9 சவரன், 44 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.கிளியனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.புகார்களின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம்

திண்டிவனம் மகாத்மா காந்தி நகர் அம்மன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 42; இவர் தனது குடும்பத்துடன் உறவினரின் பிறந்த நாள் விழாவிற்கு கடந்த 7ம் தேதி வெளியூர் சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 சவரன்நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X