ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

Added : நவ 09, 2021
Advertisement
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்,
 ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கு தேவையான பணியினை தேர்வு செய்வது குறித்த கூட்டம் சீர்பனந்தல் கிராமத்தில் நடந்தது.

கூட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். பி.டி.ஓ.,க்கள் ஆறுமுகம், நாராயணசாமி, தாசில்தார் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள். ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜி, அமிர்தம் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் பழனி, நிர்வாகி கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X